BrahMos installation test flight in Baltic Sea

No Comments »

February 3rd, 2010 Posted 2:25 am

CHENNAI: An installation test flight of the BrahMos supersonic cruise missile is scheduled to take place this year in the Baltic Sea from a stealth frigate being built for the Indian Navy at Kaliningrad in Russia, A. Sivathanu Pillai, Managing Director and Chief Executive Officer, BrahMos Aerospace Limited, said on Tuesday.

The missile’s vertical launcher and fire control system, made in India, was transported to Kaliningrad and fitted into the stealth frigate, a Talwar-class ship.

Dr. Pillai disclosed this when Russian National Security Advisor Nikolai Patroshev, along with Ambassador Alexander Kadakin, visited the BrahMos Complex in New Delhi.

The BrahMos missile is a joint product of India and Russia and it has already been inducted into the Indian Navy and Army.

Patroshev is all praise

Mr. Patroshev, who is leading a high-level delegation, lauded the development of the BrahMos as a remarkable achievement made in a short time. “The joint venture BrahMos is a bright illustration of the successful work of the Russian and Indian scientists and designers. It is based on the highest trust.”

Mr. Kadakin said the best brains of the two countries coming together made the system highly advanced and reliable.

Dr. Pillai gave an account of the progress made by the joint venture in the last 10 years and the possible areas for future collaboration. The Russian delegation’s visit would further encourage the joint venture, he said.

Three Talwar-class ships to be built for the Indian Navy by Russia would have Brah- Mos missiles.

There are four versions of BrahMos now: sea-to-sea; sea-to-land; land-to-sea; and land-to-land. Work on launching the cruise missile from submarines and aircraft was in progress, Dr. Pillai said.

Impossible to intercept K.V. Prasad reports from New Delhi:

Established in 1998, Brah- Mos Aerospace, produces and markets the BrahMos supersonic missiles. Known as BrahMos Block-2, the missile has a top speed of over Mach 5, making it virtually impossible to intercept, and it can effectively engage even slightly visible ground targets. It has been designed primarily to meet the needs of the Army.

“Army officials said they were pleased with last year’s ground trials of the missile, and approved putting it into service,” Russian news agency Ria-Novosti said, quoting Dr. Pillai.

The company has also been working on another version of the missile, BrahMos-A for the Air Force. The IAF selected the multirole fighter Sukhoi- MKI as the platform for trials scheduled for next year and targets fitment in 2012. Modifications to Su-30 MKI for integration with the BrahMos-A missile system are being carried out by Hindustan Aeronautics Limited and Russia’s Sukhoi Design Bureau.

Posted in Yavum

ஐதராபாத்: மேற்கு மண்டலத்துக்கு எதிரான துலீப் டிராபி பைனலில் தினேஷ் கார்த்திக் அபார சதம் அடித்தார். இவரது “சூப்பர்’ ஆட்டம் கைகொடுக்க தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 356 ரன்கள் குவித்தது. மேற்கு மற்றும் தெற்கு மண்டல அணிகள் மோதும், துலீப் டிராபி பைனல் ஐதராபாத்தில் நடக்கிறது. “டாஸ்’ வென்ற தெற்கு மண்டல அணி கேப்டன் தினேஷ் கார்த்திக், பேட்டிங் தேர்வு செய்தார். இர்பான் அபாரம்: தெற்கு மண்டல அணியின் துவக்க வீரர்கள் அனிருதா (19), பவன் (0) இருவரையும், இர்பான் பதான் வெளியேற்றினார். அருண் கார்த்திக் (22) நிலைக்கவில்லை. சதீஷ் (53) அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார். தெற்கு மண்டல அணி 4 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து திணறியது. கார்த்திக் சதம்: இந்நிலையில் ஜோடி சேர்ந்த கேப்டன் தினேஷ் கார்த்திக், கவுதம் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. ஐந்தாவது விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்த நிலையில் கவுதம் (49) அவுட்டானார். மறுமுனையில் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக், சதம் கடந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் தெற்கு மண்டல அணி, முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு, 356 ரன்கள் எடுத்து இருந்தது. தினேஷ் கார்த்திக் 161, கணபதி 8, ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர். மேற்கு மண்டலம் சார்பில் இர்பான் பதான் 3, ரவிந்திர ஜடேஜா 2 விக்கெட் வீழ்த்தினர். அனுமதி இல்லை: போட்டி நடக்கும் ஐதராபாத், ராஜிவ் காந்தி மைதானத்தில், நேற்று பார்வையாளர் ஒருவர் கூட உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில் கடந்த ஜன., 21 ல் இங்கு நடந்த உள்ளூர் “டுவென்டி-20′ ஆட்டத்தின் போது, உள்ளே புகுந்த, பார்வையாளர்கள் ஆடுகளத்தை சேதப்படுத்தி, “ஸ்டம்ப்சை’ பிடுங்கினர். இதனால் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதுபோன்ற சம்பவத்தை தவிர்க்கவே, பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

No Comments »

February 3rd, 2010 Posted 2:24 am

LUCKNOW: Samajwadi Party dissident and Rajya Sabha MP Amar Singh and Rampur MP Jayaprada were expelled from the party on Tuesday on the charge of indulging in activities inimical to its political interests and damaging its image.

Four MLAs, Sandeep Agarwal, Madan Chauhan, Sarvesh Singh and Ashok Chandel, who supported them, were placed under suspension. The party leadership would institute an inquiry into their activities before taking further action against them.

The decision was taken at a meeting of the newly constituted parliamentary board here. Party president Mulayam Singh and other office-bearers attended it.

No action against Jaya Bachchan

No action was taken against Rajya Sabha member Jaya Bachchan, as the parliamentary board felt that she had said nothing against the party, and her family ties with Mr. Amar Singh did not impinge on her loyalty to the party.

As for Abu Asim Azmi, the meeting said he was in the party and denied the propaganda that he had supported Mr. Amar Singh, who resigned from all party posts on January 6. The parliamentary board did not take note of the resignation of Sanjay Dutt as general secretary in support of Mr. Amar Singh.

Talking to reporters, general secretary and spokesman Mohan Singh termed the expulsion of Mr. Amar Singh and Ms. Jayaprada “corrective surgery.”

Mr. Mohan Singh blamed Mr. Amar Singh and Ms. Jayaprada for what he called the infiltration into the party of capitalist and communal forces, which threatened to derail it from its Samajwadi moorings and damage its secular character. He charged Mr. Amar Singh with pursuing casteist politics: while the Samajwadi Party followed the policy of “jaati-todo” (casteless), Mr. Amar Singh was promoting “jaati-pakdo” politics.

Mr. Mohan Singh said the parliamentary board had taken a serious view of the formation of the Lok Manch by Mr. Amar Singh and felt it amounted to the formation of a separate party.

Mr. Mohan Singh referred to Ms. Jayaprada’s press conference in New Delhi on Sunday, at which she allegedly made some indecent remarks against the leadership. He accused her of making statements in favour of the former Chief Minister, Kalyan Singh. This, he said, showed that communal forces had infiltrated the party. No leader had the right to publicly voice his or her opinion against the party.

As for the membership of Mr. Amar Singh and Ms. Jayaprada in Parliament, Mr. Mohan Singh said legal opinion would be sought and petitions would be presented to the Lok Sabha Speaker and the Rajya Sabha Chairman.

Posted in Yavum

துலீப் டிராபி: தினேஷ் கார்த்திக் அபாரம்

No Comments »

February 3rd, 2010 Posted 2:20 am

ஐதராபாத்: மேற்கு மண்டலத்துக்கு எதிரான துலீப் டிராபி பைனலில் தினேஷ் கார்த்திக் அபார சதம் அடித்தார். இவரது “சூப்பர்’ ஆட்டம் கைகொடுக்க தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 356 ரன்கள் குவித்தது.
மேற்கு மற்றும் தெற்கு மண்டல அணிகள் மோதும், துலீப் டிராபி பைனல் ஐதராபாத்தில் நடக்கிறது. “டாஸ்’ வென்ற தெற்கு மண்டல அணி கேப்டன் தினேஷ் கார்த்திக், பேட்டிங் தேர்வு செய்தார்.
இர்பான் அபாரம்: தெற்கு மண்டல அணியின் துவக்க வீரர்கள் அனிருதா (19), பவன் (0) இருவரையும், இர்பான் பதான் வெளியேற்றினார். அருண் கார்த்திக் (22) நிலைக்கவில்லை. சதீஷ் (53) அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார். தெற்கு மண்டல அணி 4 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து திணறியது.
கார்த்திக் சதம்: இந்நிலையில் ஜோடி சேர்ந்த கேப்டன் தினேஷ் கார்த்திக், கவுதம் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. ஐந்தாவது விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்த நிலையில் கவுதம் (49) அவுட்டானார். மறுமுனையில் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக், சதம் கடந்தார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் தெற்கு மண்டல அணி, முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு, 356 ரன்கள் எடுத்து இருந்தது. தினேஷ் கார்த்திக் 161, கணபதி 8, ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.
மேற்கு மண்டலம் சார்பில் இர்பான் பதான் 3, ரவிந்திர ஜடேஜா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அனுமதி இல்லை: போட்டி நடக்கும் ஐதராபாத், ராஜிவ் காந்தி மைதானத்தில், நேற்று பார்வையாளர் ஒருவர் கூட உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில் கடந்த ஜன., 21 ல் இங்கு நடந்த உள்ளூர் “டுவென்டி-20′ ஆட்டத்தின் போது, உள்ளே புகுந்த, பார்வையாளர்கள் ஆடுகளத்தை சேதப்படுத்தி, “ஸ்டம்ப்சை’ பிடுங்கினர். இதனால் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதுபோன்ற சம்பவத்தை தவிர்க்கவே, பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Posted in Yavum

திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை * லட்சுமண் கவலை

No Comments »

February 3rd, 2010 Posted 2:19 am

புதுடில்லி: “”உள்ளூர் கிரிக்கெட் அணிகளில், தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை. இதனால் எதிர்காலத்தில் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் பற்றாக்குறை ஏற்படலாம்,” என, லட்சுமண் தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி வீரர் லட்சுமண். இதுவரை 109 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 6993 ரன்கள் குவித்துள்ளார். அனுபவ வீரரான இவர், இந்திய அணிக்கு திறமையான சுழற்பந்து வீச்சாளர் தேவை என தெரிவித்துள்ளார். இது குறித்து லட்சுமண் கூறியது: இந்திய அணியின் தற்போதைய சுழற்பந்து வீச்சு பாராட்டும் படியாக உள்ளது. ஆனால் இனி வரும் காலங்களில், நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இந்திய அணியில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏனெனில் உள்நாட்டு கிரிக்கெட் அணிகளில், திறமையான சுழற்பந்து வீச்சாளர்களை பார்க்க முடியவில்லை. இது அணிக்கு பெரும் பாதிப்பாக அமையும் என கருதுகிறேன்.
பேட்டிங் பலம்:  பேட்டிங்கை பொறுத்த வரை, சுரேஷ் ரெயனா, ரோகித் சர்மா உள்ளிட்ட இளம் வீரர்கள் அசத்தி வருகின்றனர். ஐதராபாத் வீரர் அம்பாட்டி ராயுடு திறமையான அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வருவார் என எதிர்பார்க்கிறேன். கர்நாடகா அணியில் பல வீரர்கள் அசத்தி வருவதாக, டிராவிட்டும் தெரிவித்துள்ளார். இதனால் அணியின் பேட்டிங் வரிசை எதிர்காலத்திலும் பலமாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.
ஆபத்து இல்லை: ”டுவென்டி-20′ போட்டிகளின் அசுர வளர்ச்சியால், டெஸ்ட் போட்டிகளுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இல்லை. பாரம்பரியமிக்க இவ்வகை போட்டிகளில் விளையாடவே, இளம் வீரர்கள் விரும்புகின்றனர். ஏனெனில் வீரர்களின் உண்மையான திறனை வெளிப்படுத்துவது டெஸ்ட் போட்டிகள் தான். ஒரு நாள் போட்டிகளுக்கு தான், தற்போது ஆபத்து. இவ்வாறு லட்சுமண் தெரிவித்தார்.

Posted in Yavum

துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 5 பதக்கம்

No Comments »

February 3rd, 2010 Posted 2:16 am

தாகா: தெற்காசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு இரண்டு தங்கம் உட்பட 5 பதங்கங்கள் கிடைத்தன.
வங்கதேச தலைநகர் தாகாவில் 11வது தெற்காசிய விளையாட்டு போட்டி நடக்கிறது. நேற்று நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா அசத்தியது. ஆண்களுக்கான 25 மீ., “ஸ்டாண்டர்ட் பிஸ்டல்’ பிரிவில் விவேக் சிங் தங்கம் வென்றார். சந்திரசேகர் குமார் சவுத்ரி வெண்கலம் கைப்பற்றினார். இதே பிரிவில், அணிகளுக்கான போட்டியில் விவேக் சிங், சந்திரசேகர் குமார் சவுத்ரி, ஹர்பரீத் சிங் ஆகியார் அடங்கிய நமது குழு தங்கம் வென்றது.
பெண்களுக்கான 10 மீட்டர் “ஏர் ரைபிள்’ பிரிவில் காய்ச்சலை பொருட்படுத்தாது அபாரமாக செயல்பட்ட 13 வயதான இந்தியாவின் மம்பி தாஸ்(496.6 புள்ளி) வெண்கலம் வென்று சாதித்தார். பின் குழு பிரிவில் மம்பி தாஸ், சுருதி படேபடேல், தேஜஸ்வனி ஆகியோர் அடங்கிய சேர்ந்து வெள்ளி வென்றனர்.
பளுதூக்குதலில் 2 தங்கம்: பளுதூக்குதல் 105 கி.கி., பிரிவில் அசத்திய சந்தீப் குமார் மற்றும் சீனிவாச ராவ் தங்கம் கைப்பற்றினர். சைக்கிள் பந்தயத்தில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. நேற்று நடந்த 170 கி.மீ., “ரோடு ரேசில்’ ராஜேந்திர பிஷ்னோய் வெள்ளிப் பதக்கம் வென்றார். இப்போட்டியில் பிஷ்னோய், இலங்கையின் ஜனகா ஹேமந்த், பாகிஸ்தானின் நிசார் அகமது ஆகியோர் இடையே கடும் போட்டி காணப்பட்டது. மூவரும் 4 மணி நேரம், 48 நிமிடம், 34 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்தனர். ஆனாலும் “போட்டோ பினிஷ்’ அடிப்படையில், வினாடிக்கும் குறைவான நேரத்தில் முந்திய ஜனகா, தங்கம் வென்றார். பிஷ்னோய், வெள்ளியுடன் ஆறுதல் அடைந்தார். நிசாருக்கு வெண்கலம் தான் கிடைத்தது.
இந்தியா முதலிடம்: பதக்கப் பட்டியலில், தற்போது இந்தியா 15 தங்கம், 3 வெள்ளி, 7 வெண்கலம் உட்பட 25 பதக்கங்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 6 தங்கம் உட்பட 21 பதக்கங்களுடன் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 17 பதக்கங்கள் வென்றுள்ள இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது.

Posted in Yavum

சச்சினை கவர்ந்த பாலிவுட் நட்சத்திரங்கள்

No Comments »

February 3rd, 2010 Posted 2:14 am

மும்பை: பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப்பச்சன், பின்னணி பாடகிகள் லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே ஆகியோர் தான் தன்னை அதிகம் கவர்ந்தவர்கள், என, இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் “மாஸ்டர்’ பேட்ஸ்மேன் சச்சின். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 30 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்து, சாதனை படைத்துள்ளார். இவரது சாதனை குறித்து கோல்கட்டாவின் கவுதம் பட்டாச்சர்யா எழுதிய புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் சச்சின் தெரிவித்துள்ள சில சுவாரஸ்யமான விஷயங்கள்:
வாழ்க்கையில் பல்வேறு வழிகளில், ஒருவர் ஊக்கம் பெறலாம். சிறப்பான பேச்சு அல்லது பரபரப்பான கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பைனல் கவர்ந்து இழுக்கலாம். என்னை பொறுத்தவரை பாலிவுட் நட்சத்திரங்கள் தான் ஊக்க சக்தியாக அமைந்தனர்.
சமீபத்தில் ஆஷா போன்ஸ்லேயின் தீவிர ரசிகராக மாறினேன். 75 வயதான நிலையிலும் அவர், வியக்கத்தக்க அளவில் செயல்படுகிறார். நன்கு அனுபவித்து பாடுகிறார். இவரது ஆற்றல் நம்பமுடியாத அளவில் உள்ளது. அதுபோல அமிதாப்பச்சன். இவரது அனைத்துப் படங்களும் எனக்கு பிடிக்கும்.
ஆச்சரியமாக உள்ளது: அமிதாப்பச்சன், ஆஷா போன்ஸ்லே, லதா மங்கேஷ்கர் ஆகிய மூவரும் என்னை கவர்வதற்கு, மும்பையில் இருந்து வந்தது கூட ஒரு காரணமாக இருக்கலாம். இவர்களை பலமுறை சந்தித்துள்ளேன். ஆனால் நீண்ட ஆண்டுகளாக எப்படி, இவர்களால் தொடர்ந்து சாதிக்கமுடிகிறது என்பது தான், ஆச்சர்யமாக உள்ளது.
ரகுமானுக்கு பாராட்டு: அதுபோல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானையும் வியந்து பாராட்டியுள்ளேன். இவர் ஆஸ்கர் விருதுகளை வென்ற போது, நாங்கள் நியூசிலாந்தில் விளையாடிக் கொண்டிருந்தோம். அங்கிருந்து அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பினேன்.
துணிச்சல் வேண்டும்: கிரிக்கெட் தவிர, எனது தந்தையின் இழப்பு, ராஜ் சிங் துங்கர்புர் மரணம் என தனிப்பட்ட சில விஷயங்களை விவரிப்பது மிகவும் கடினம். இதுபோன்ற சில சம்பவங்களை சந்திப்பதற்கு, துணிச்சல் வேண்டும். கடந்த 1999ல் இங்கிலாந்துக்கு உலக கோப்பை போட்டிக்கு சென்ற போது, எனது தந்தை மரணம் அடைந்ததால், இந்தியா திரும்பினேன். அப்போது எனது அம்மா உட்பட எல்லோரும் மீண்டும் விளையாட செல்லுமாறு கூறினர். ஏனெனில் எனது தந்தை இருந்திருந்தாலும் அதைத்தான் விரும்பியிருப்பார்.
லாராவுக்கு பாராட்டு: வெஸ்ட் இண்டீஸ் வீரர் லாராவை, முதன் முதலாக கடந்த 1990ல் சந்தித்தேன். பாகிஸ்தான் அணிக்கு எதிராக “ரெஸ்ட் ஆப் வேர்ல்டு’ அணியில் இருந்த நாங்கள் இருவரும் இணைந்து 150க்கும் மேல் ரன்கள் எடுத்தோம். அவரது அனுபவ ஆட்டத்தை, மறுமுனையில் இருந்து ரசித்த பார்த்தது மறக்கமுடியாது. நான் எப்போதும் அவரை பின்பற்றியதில்லை. ஆனால் அவரது ஆட்டங்களை “டிவி’யில் தவறாமல் பார்ப்பேன். எனக்குப் பிடித்த வீரர்களில் லாராவும் ஒருவர். எங்களுக்குள் எந்த பகைமையோ, விரோதமோ இல்லை.
இவ்வாறு அந்த புத்தகத்தில் சச்சின் தெரிவித்துள்ளார்.

Posted in Yavum

அபிஷேக் சதம்: மீண்டது இந்திய லெவன்!

No Comments »

February 3rd, 2010 Posted 2:12 am

நாக்பூர் : பயிற்சி போட்டியில்அபிஷேக் நாயர் சதம் அடிக்க, இந்திய போர்டு பிரசிடென்ட் லெவன் அணி சரிவில் இருந்து மீண்டது. துவக்கத்தில் தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் அசத்தினர்.இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங் கேற்கிறது. முதல் போட்டி வரும் 6ம் தேதி துவங்குகிறது. அதற்கு முன்னதாக இந்திய போர்டு பிரசிடென்ட் லெவன், தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் இரண்டு நாள் பயிற்சி போட்டி நேற்று நாக்பூரில் துவங்கியது. டாஸ் வென்ற இந்திய லெவன் கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங் தேர்வு செய்தார்.

“டாப்-ஆர்டர்’ சரிவு: துவக்கத்தில் தென் ஆப்ரிக்க “வேகப்புயல்கள்’ மிரட்டினர். மார்க்கல் பந்தில் பார்த்திவ் படேல் (8) வெளியேறினார். ஸ்டைன் வேகத்தில் முகுந்த்(8) வீழ்ந்தார். பார்னல் பந்துவீச்சில் ரோகித் சர்மா(20), ரஹானே(12) அவுட்டாக, இந்திய லெவன் அணி, 4 விக்கெட்டுக்கு 56 ரன்கள் எடுத்து திணறியது. அடுத்து வந்த மணீஷ் பாண்டே, சிறிது நேரம் அதிரடி காட்டினார். 42 பந்தில் 43 ரன்(5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசிய இவர், மார்கல் பந்தில் பெவிலியன் திரும்பினார். உள்ளூர் போட்டிகளில் “ரன் மெஷினாக’ வலம் வந்த சத் தேஷ்வர் புஜாரா(17), இம்முறை ஏமாற்றம் அளிக்க, இந்திய லெவன் அணி 6 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

தவான் அரைசதம்: இதற்கு பின் ஷிகர் தவான், அபிஷேக் நாயர் இணைந்து அணியை மீட்டனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள், 7வது விக்கெட்டுக்கு 181 ரன்கள் சேர்த்தனர். அரைசதம் கடந்த தவான்(70), போத்தாவின் நேரடி “த்ரோவில்’ பரிதாபமாக ரன் அவுட்டானார். அபாரமாக பேட் செய்த அபிஷேக் சதம் அடித்தார். இவர் 100 ரன்களுக்கு(16 பவுண்டரி), மார்கல் பந்தில் வெளியேறினார். “டெயிலெண்டர்களான’ பியுஸ் சாவ்லா(8), ரவிச்சந்திரன் அஷ்வின்(8) சோபிக்கவில்லை. இறுதியில் இந்திய போர்டு பிரசிடென்ட் லெவன் அணி, முதல் இன்னிங்சில் 318 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்ரிக்கா சார்பில் மார்கல், பார்னல் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

ஸ்மித் அதிரடி: பின் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் ஸ்மித், பிரின்ஸ் இணைந்து அசத்தல் துவக்கம் தந்தனர். நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் எடுத்திருந்தது. அதிரடியாக ஆடிய ஸ்மித் 30(5 பவுண்டரி), பிரின்ஸ் 13 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.

பிஷன் சிங் பேடி அதிருப்தி : புதுடில்லி: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி கூறுகையில்,”"இந்திய, தென் ஆப்ரிக்க அணிகளின் திறமையை சோதிக்க, இரண்டு டெஸ்ட் போட்டிகள் போதுமானதல்ல. கூடுதலாக ஒரு போட்டியாவது சேர்த்திருக்க வேண்டும். எதிர்காலத்தில் 3 அல்லது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோத வேண்டும். சுழலுக்கு அதிகம் ஒத்துழைப்பதை காட்டிலும், 5 நாட்கள் தாக்குப்பிடிக்கக்கூடிய வகையில் சிறந்த ஆடுகளம் அமைப்பதே முக்கியம்,”என்றார்.

ஹர்பஜன் நம்பிக்கை : மும்பை: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக டிராவிட், யுவராஜ், ஸ்ரீசாந்த் இடம் பெறவில்லை. இவர்கள் இல்லாத நிலையிலும், இந்திய அணி சாதித்து காட்டும் என ஹர்பஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இவர் கூறுகையில்,”"மூவருக்கு, பதில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்கள், உள்ளூர் ரஞ்சி போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இவர்களதுஅபார ஆட்டம் தொடரும்பட்சத்தில், தென் ஆப்ரிக்காவை எளிதாக சமாளிக்கலாம்,”என்றார்.

Posted in Yavum

பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்தில் தலையிட பிரதமருக்கு கடிதம்

No Comments »

February 3rd, 2010 Posted 1:50 am

புதுடில்லி:பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் தலையிட்டு நிர்வாகத்தை மாற்றி, புதிய அதிகாரிகளை நியமிக்கும்படி அந்நிறுவன ஊழியர்கள் அசோசியேஷன், பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களாக பி.எஸ்.என்.எல்., - எம்.டி.என்.எல்., - ஏர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.இவற்றில் தகவல் தொடர்புத்துறை சார்ந்த பி.எஸ்.என்.எல்., சமீபகாலமாக பொதுச்சந்தையில் சரிவைச் சந்தித்து வருகிறது.

இதனால், தகவல் தொடர்புச் சந்தையில் முதலிடத்தில் இருந்த பி.எஸ்.என்.எல்., இப்போது பாரதி ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் நிறுவனங்களை அடுத்து நான்காம் இடத்துக்கு  தள்ளப்பட்டுவிட்டது.நிறுவன வருமானமும் கணிசமான அளவில் குறைந்து விட்டது.
2008-09ம் நிதியாண்டில் 12 சதவீதம் அளவுக்கு அதாவது 33 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வீழ்ச்சியடைந்துவிட்டது. ஆனால், மொபைல் போன் சந்தையில் மட்டும் முதலிடத்தைத் தக்க வைத்திருக்கிறது.இந்நிலையில், நிர்வாகத்தின் மோசமான அணுகுமுறையால் தான் பி.எஸ்.என்.எல்., சரிவைச் சந்தித்து வருகிறது என்று அதன் ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அனைத்திந்திய பட்டதாரி பொறியாளர் டெலிகாம் அதிகாரிகள் அசோசியேஷன் தலைவர் சிலோகு ராவ் கூறுகையில், “பி.எஸ்.என்.எல்.,ன் மேல்மட்டத்தில் சரியான நிர்வாகம் இல்லை. இதில் தலையிடுமாறு பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். பிரதமரின் ஐ.டி., துறை ஆலோசகர் சாம் பிட்ராடோவைச் சந்தித்து பிரச்னைகளை விளக்க உள்ளோம்’ என்றார்.

மற்றொரு ஊழியர்கள் அமைப்பான சஞ்சார் நிகாம் செயல் அலுவலர் அசோசியேஷனும் பிரதமர் அலுவலகத்துக்கு நிறுவனத்தின் மேல்மட்ட அதிகாரிகளின் தகுதி குறித்து கேள்வி எழுப்பி கடிதம் அனுப்பியுள்ளது.

Posted in Yavum

ஈராக்கில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 41 பேர் பலி

No Comments »

February 3rd, 2010 Posted 1:35 am

பாக்தாத்:ஈராக்கில் தற்கொலைப் படையைச் சேர்ந்த பெண், யாத்திரிகர்கள் கூட்டத்தில் புகுந்து தன் உடலில் அணிந்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில், 41 பேர் பலியாயினர்; 106 பேர் படுகாயமடைந்தனர்.ஈராக்கில் அதிபர் சதாம் உசேன் தலைமையிலான ஆட்சி அகற்றப்பட்டது முதல், 2003ம் ஆண்டிலிருந்து அமெரிக்க படைகள் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றன. படிப்படியாக இந்த படைகள் வாபசாகி வருகின்றன.

இதற்கிடையே அடுத்த மாதம் ஈராக்கில் பொதுத்தேர்தல் நடக்கிறது. மைனாரிட்டியான சன்னி பிரிவைச் சேர்ந்த சதாம் உசேன், ஈராக்கை பல ஆண்டு காலம் ஆட்சி செய்தார். அவரது ஆட்சி நீக்கப்பட்டு தற்போது இங்கு ஷியா பிரிவினர் தலைமையில் ஆட்சி நடக்கிறது. சதாம் ஆதரவு பயங்கரவாதிகள் அடிக்கடி இங்கு குண்டு வெடிப்புகளை நடத்தி வருகின்றனர்.அடுத்த மாதம் நடக்கும் பொதுத்தேர்தலை குலைக்கும் பொருட்டு சமீபகாலமாக குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் நேற்று முன்தினம், யாத்திரிகர்கள் பலர் தலைநகர் பாக்தாத்திலிருந்து புனித தலமான கர்பாலாவை நோக்கி பயணம் மேற்கொண்டனர்.இந்த கூட்டத்துக்குள் புகுந்த பர்தா அணிந்த பெண் ஒருவர் தன் உடலில் அணிந்திருந்த பெல்ட் வெடிகுண்டை வெடிக்க செய்தார். சக்தி வாய்ந்த இந்த வெடிகுண்டு வெடித்ததில் 41 பேர் உடல் சிதறி பலியாயினர்; 106 பேர் படுகாயமடைந்தனர்.

Posted in Yavum

நிர்வாக அலட்சியத்தால் தீக்கிரையான பஸ்கள்

No Comments »

February 3rd, 2010 Posted 1:34 am

நாகப்பட்டினம் : தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக நாகை கிளையில், நிர்வாக அலட்சியத்தால் இரண்டு பஸ்கள் நேற்று தீயில் எரிந்து சேதமடைந்தன.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக நாகை கிளை பணிமனையில், நேற்று காலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக திடீரென்று தீப்பிடித்து எரிந்தன. ஒரு “அல்ட்ரா டீலக்ஸ்’ பஸ் முற்றிலுமாக எரிந்து போனது. தீயணைப்புத் துறையினர், மற்ற பஸ்களுக்கு தீ பரவாமல் தடுத்தனர். தீயை அணைக்க, பணிமனைக்குள் புகுந்த மக்களை உள்ளே விடாமல் நிர்வாகம் துரத்தி அடித்தது. இதுகுறித்து, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கூறுகையில், “பஸ் ஒன்றுக்கு, “வெல்டிங்’ நடந்து கொண்டிருக்கும் போது மின் நிறுத்தம் ஏற்பட்டதால், ஊழியர்கள், “வெல்டிங்’ இயந்திரத்தை நிறுத்தாமலே வெளியில் சென்று விட்டனர். மீண்டும் மின்சாரம் வரவே, இயந்திரம் தானே இயங்கி நெருப்பு பொறிகளை நீண்ட நேரம் வெளியேற்றியதால், சிதறிக் கிடந்த டீசல் கழிவில் தீ பற்றி, பஸ்சுக்குள் பரவி, இரண்டு பஸ்களும் எரிந் துள்ளன’ என்றனர்.